திதி சூன்ய ராசிகளும் பலன்களும்

திதி சூன்ய ராசிகளும் பலன்களும்

திதி என்றால் தூரம் என்று பொருள். அதாவது சூரியனுக்கும் சந்தரனுக்கும் இடைப்பட்ட தூரமே திதி எனப்படுகிறது. திதியானது சாஸ்திரங்களில் பித்ரு தர்ப்பனங்களுக்கு அனுசரிக்கப்படவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. திதி சூன்யம் என்பது திதியால் வரும் தோசமாகும். அதாவது முன்னோர் சாபமாகும். முன்னோர் சாபத்தினால் நமக்கு வரும் தடைகளைத்தான் இந்த திதி சூன்ய ராசிகள் மற்றும் கிரகங்கள் சுட்டிக்காடுகின்றன.
அவரவர் பிறந்த ஜென்ம திதிகளின் அடிப்படையில் இரண்டு ராசிகள் சூன்ய ராசிகளாக அமையும். சூன்ய ராசிகளின் அதிபதிகளாக வரும் கிரகங்கள் சூன்ய கிரகங்களாகும். அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
சூன்ய திதி -சூன்ய ராசி - சூன்ய கிரகங்கள்
1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
2. துதியை திதி தனுசு-மீனம் குரு
3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்
4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்
5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்
6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்
 7. ஸப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்
 8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்
 9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு
12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்
14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்
 அமாவாசை, பௌர்ணமி, ஆகிய திதிகளுக்கு சூன்ய ராசிகள் கிடையாது.நீங்கள் எந்த திதியில் பிறந்து இருந்தாலும் உங்கள் ஜென்ம லக்னம் சூன்ய ராசியாக அமையக்கூடாது. அவ்வாறு அமைந்தால் தலைவலி, மன உளைச்சல், எதிர் மறை எண்ணங்கள், மன விரக்தி, மன வேதனை, போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
 ஒவ்வொரு திதியில் பிறந்தவர்களுக்கும்  இரண்டு பாவங்கள் சூன்யம் அடையும் அந்த பாவங்களில் ஜாதகருக்கு ஏதாவது ஒரு குறை இருக்கும். எடுத்துக்காட்டாக ஏழாம் பாவம் திதி சூன்யம் அடைந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன்/மனைவி அமைவதில் சிரமம் ஏற்படும்.தொழில் முறை கூட்டாளிகள் சரிவர அமையாமல் போகலாம். இப்படி, எந்த பாவம் நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப் முழுமையாகக் கிடைக்காது.  திதி சூன்யம் பெறும் கிரகங்கள் தங்கள் காரக பலத்தை இழந்துவிடுவார்கள். அதன்  காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்.
 சூரியன் திதி சூன்யம் பெற்றால் தந்தை பாசம் கிடைக்காமல் போகலாம்.
சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயாரின் பாசம் கிடைக்காமல் போகலாம்.
செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் உடன் பிறப்புகளால் நன்மை இல்லை.
 புதன் திதி சூன்யம் பெற்றால் கல்வியில் தடை ஏற்படலாம்.
 சுக்கிரன் திதி சூன்யம் பெற்றால் திருமணம் தாமதப்படும்
 குரு திதி சூன்யம் பெற்றால் புதல்வர்களால் நன்மை இல்லை

 சனி திதி சூன்யம் பெற்றால் தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படும்.

Comments