மருதம்பட்டை

மருதம்பட்டை
Latin Name – Terminalia arjuna
Family – Combretaceae (हरीतकीकुलम्)
English Name – Arjun
Sanskrit Name – अर्जुनः, ककुभः
Tamil Name – ஆற்றுமருது, நீர்மருது, வெள்ளைமருது, மருது
இந்தியா முழுவதும் வளரக்கூடிய ஒரு மரம் மருதமரம். மருதமரத்தினுடைய பட்டை மருத்துவகுணம் வாய்ந்தது. பட்டை துவர்ப்புச் சுவை மற்றும் இனிப்புச் சுவை உடையது. வீரியத்தில் குளிர்ச்சியானது. குடலுக்கு வழுவழுப்பூட்டக்கூடியது. இதயத்திற்கு நல்ல வலுவைச் சேர்க்கும். இரத்தக்கசிவை நிறுத்தக்கூடியது. எலும்பு முறிவு, குடல்புண், வெள்ளைப்படுதல், சர்க்கரை உபாதை பித்தம் அதிகரித்த நிலை, இரத்தசோகை, சோர்வு, மூச்சிரைப்பு, மூச்சுக்குழாயில் ஏற்படும் சளி அடைப்பு, கட்டி, காது வலி, பேதியாகுதல், அழற்சி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் இரத்தக்கொதிப்பு உபாதைகளில் நல்லதொரு மருந்தாகப் பயன்படும். அர்ஜுனாரிஷ்டம், பார்த்தாத்யாரிஷ்டம் என்ற பெயரில் இதயத்தை வலுவாக்கும் ஆயுர்வேதமருந்துகளில் மூலப்பொருளாக முக்கியமாக மருதம்பட்டை சேர்க்கப்படுகிறது. சுமார் 30 மி.லி. காலை உணவிற்குப் பிறகு சாப்பிட்டால் பல இதயசம்பந்தமான நோய்கள் விலகிவிடுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

Comments