அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம்

அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம் 

தாம்பூலம் என்பது வெற்றிலை பாக்கு இவற்றிற்கு வழங்கப்படும் பொதுப்பெயர் ஆகும்.

(வெற்றிலையில் முப்பெரும் ( துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ) தேவியர்களும் வசிப்பதால் நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அவசியம் தாம்பூலம் தருதல் வேண்டும்.
குறைந்த பட்சம் குங்குமமாவது தரவேண்டும்.)

அம்பாளின் லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
தாம்பூல பூரித முகீ என்று வரும்.
(தாம்பூலம் தரித்த சிவந்த வாயை உடையவள் )

மேலும் பகவானுக்கு செய்யும் பூஜையில் கூட கீழ்க்கண்ட மந்திரத்தில் நிவேதன மந்திரமாக தாம்பூலம் அங்கம் வகிக்கிறது.

நிவேதன மந்திரம் :

பூகீ பல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுக்தம் கற்பூர ஸூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம்.
கற்பூர தாம்பூலம் நிவேதயாமி என்று கூறி அந்த தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் தெளித்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வார்கள்.

வெற்றிலையில் முப்பெரும் ( துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ) தேவியர்களும் வசிப்பதால் நம் இல்லத்திற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அவசியம் தாம்பூலம் தருதல் வேண்டும்.,
குறைந்த பட்சம் குங்குமமாவது தரவேண்டும்.

வெற்றிலை சத்தியத்தின் சொருபமாக விளங்குவதால் தான் நிச்சயதாம்பூலத் தன்று வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.  அப்படி நிச்சயம் ( உறுதி ) செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது வாக்குத் தவறிய கொடும் பாவத்தை தேடித் தரும்.

எல்லா தெய்வங்களின் பூஜையிலும் தாம்பூலத்திற்கு  முக்கிய இடம் உண்டு.
பகவானுக்கு நிவேதனம் செய்யும் போது தாம்பூலம் ( வெற்றிலை பாக்கு ) அவசியம்.  மேலும் அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் ஆகும்.

தாம்பூலம் ஆனது கீழ்க்கண்ட மங்களப்  பொருள்களை உள்ளடக்கியது ஆகும்......

வெற்றிலை ; பாக்கு ; மஞ்சள் ; குங்குமம் ; சீப்பு ; முகம் பார்க்கும் கண்ணாடி ; வளையல்கள் ; திருமாங்கல்ய சரடு ( மஞ்சள் கயிறு ) ; பழம் ; பூ ; தேங்காய் ;  மருதாணி ; தக்ஷிணை ; கண்மை ; புடவை ; ரவிக்கைத்துணி ; ஸ்லோக புஸ்தகம் ஆகியவை ஆகும்.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை என்னவென்றால்

01. வெற்றிலை பாக்கு ~ தாம்பூல மரியாதை குறிக்கும்.

02. மஞ்சள் குங்குமம் ~ சுமங்கலித் தன்மை நீடிக்கும்.

03. திருமாங்கல்ய சரடு ~ தாலி பாக்கியம் அதிகரிக்கும்.
( மஞ்சள் கயிறு )

04. சீப்பு ~ கணவனின் ஆயுள் விருத்தியாகும்.

05. வளையல்கள் ~ மன அமைதி கிடைக்கும்.

06. கண்ணாடி ~ கணவனின் ஆரோக்யம் நன்றாக இருக்கும்.

07. தேங்காய் ~ பாவங்கள் நீங்குதல்
{ மட்டைத் தேங்காய் ( உரிக்காதது ) அளிப்பது உத்தமம் }

08. பழங்கள் ~ அன்னதான பலன் கிடைக்கும்.

09. பூ ~ மகிழ்ச்சி பெருகும்.

10. மருதாணி ~ நோய்நொடி வராமல் இருக்கும்.

11. கண்மை ~ த்ருஷ்டி., தோஷங்கள் விலகும்.

12. புடவை., ரவிக்கை ~ வஸ்திர தான பலன் கிட்டும்.

13. ஸ்லோக புஸ்தகம் ~ வித்யா தான பலன் கிடைக்கும்.


இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்க சுமங்கலியாக வைத்திருப்பாள்.

Comments