பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. அதுதான் உன்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது. பொறுப்பை ஏற்றுக் கொள். "நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பல்ல. எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும். என்னவோ தவறாக இருக்கிறது. எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்." என்று சதா நினைத்துக் கொண்டிரு.
பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அபபோதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது
ஆழ்ந்த தியானத்தில் மரணத்துக்குப் பழகிப் போகும்போது பயம் மறைந்து போய்விடுகிறது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, "நான் இந்த உடல் அல்ல. நான் இந்த மனம் அல்ல. பிறகு எனக்கேது மரணம்?" என்பது தெரிந்துவிடுகிறது. இந்த உடல் மண்ணோடு மண்ணாகிப் போகும் ஆனால் பிரக்ஞை என்றும் இருக்கும். அப்போது பயம் மறைந்து போய்விடுகிறது. பயம் மறைந்து விடும்போது பிறருடைய பயத்தை நீக்க வேண்டும் என்ற மகத்தான ஆசை வந்துவிடுகிறது. பயத்தில் வாழ்கிறவர்கள் துயரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பயம் சூழ்ந்த பயங்கரமாக இருக்கிறது
பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக்கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக்கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அப்போதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது.
கவனிப்பது என்றால் சுதாரித்து இருப்பது. கவனமாக இருப்பது. ஊக்கமாக நின்றிருப்பது மனதைக் கொண்டு எதையும் விகாரப்படுத்தாமல் வருவதை அப்படியே பெற்றுக் கொள்வது. உள்ளே எந்த இரைச்சலும் இல்லாமல் மெளனித்திருப்பது. தூங்கிக் கொண்டிருப்பதல்ல. முழுக்க விழித்திருப்பது. உன் வீடு தீப்பிடித்துக்கொண்டால் எப்படி நடந்து கொள்வாய்? தூங்குவதற்கான நேரமா அது? வீடு தீப்பற்றி எரியும்போது தூங்க முடியாது. முடியும் என்கிறாயா? வீடு தீப்பற்றி எரியும்போது தூக்கக் கலக்கத்தில் இருக்க முடியாது. வெகு சுதாரிப்போடு இருப்பாய்.
உண்மையான சந்நியாசம் என்ன என்கிறாயா? நன்றாக சிரி. ஆனால் நீ வேறு, உன் சிரிப்பு வேறு என்பதைத் தெரிந்திரு. அழு. நன்றாக அழு. கண்ணீர் பெருகட்டும். அழுகையிலும் ஒரு முழுமை இருக்கட்டும். ஆனால் சுதாரித்திரு. உனக்குள் ஒரு சுடர் அனைத்தையும் கவனித்துக் கொண்டருக்கட்டும்.
ஆனந்தம் உன் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அப்படியேதான் துயரமும். ஆனந்தம் காலை நேரத்துப் பனித்துளியின் புத்துணர்ச்சியைத் தருகிறது. ஆனந்தம் உன் இளமையைத் தருகிறது. ஆனந்தம் உன் நெஞ்சை நடனமாட வைக்கிறது. சோகமும் பல பரிசுகளைத் தருகிறது. ஆனால் நீயோ சோகத்திலிருந்து தப்பித்துக்கோள்கிறாய். எனவே அதன் பரிசுகள் என்ன என்பது உனக்கு தெரிவதில்லை. சோகம் தரும் மெளனம் எந்த ஆனந்தமும் தர முடியாது. ஆனந்தம் சற்றே இரைச்சலிடுவது. சோகமோ ஆழ்ந்த மெளனத்தோடு கூடியது. ஆனந்தம் சற்றே மேடிட்டிருப்பது. சோகமோ வெகு ஆழமானது. அதில் ஆழம் இருக்கிறது. ஆனந்தம் உன்னை மறக்கடிக்க வைப்பது. ஆனந்தத்தில் முழுகிப் போவது மிகச் சுலபம். ஆனந்தப் போதையில் திளைப்பது சுலபம். ஆனந்தம் உன்னைப் பிரக்ஞை தப்பிப் போக வைக்கிறது. சோகம் உன்னை விழித்திருக்க வைக்கிறது. ஏனென்றால் அதில் நீ மூழ்கிவிட முடியாது. அதில் பங்கெடுத்துக்கொள்ளலாம். புறத்தே நின்று பார்க்க முடிகிறது. ஆனால் நீதான் அதை வேண்டாம் என்கிறாயே!
சாட்சியாக இருப்பதன் முதல் பாடங்களைச் சோகம் எனும் வகுப்பறைகளில் கற்றுக் கொள்கிறாய். சோகத்தில் இருக்கும்போதுதான் சாட்சியாக இருக்க முடிகிறது. போகப் போக இதே சாட்சி பாவனை ஆனந்தத்திலும் சாத்தியமாகிறது. என்னவானாலும் சரியே. சாட்சியாக இருப்பதன் மூலமே கடந்து போக முடியும். எதையும் விஞ்சி நிற்க முடியும்.
கடவுள் ஓர் ஆளல்ல. அவர் தான் என்ற உணர்வல்ல. கடவுளைச் சந்திக்க வேண்டும் என்றால் ஓரளவுக்கு அவரைப் போலாகிப் போக வேண்டும். தான் இல்லாத நிலை. ஓர் ஆளாக இருக்காத நிலை. கடவுள் ஓர் இருப்பு. கடவுளோடு எந்த தொடர்பாவது வேண்டும் என்றால் நீயும் அப்படி ஓர் இருப்பாக மட்டுமே இருக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஓர் ஆளாக அல்ல. சுதாரித்தவனாக. முழுச் சுதாரிப்போடு, இருக்க வேண்டும். ஆனால் நான் என்பது கழிந்த நிலையில் இருக்க வேண்டும்.
நான் என்பதைக் கழிக்க மிகச் சிறந்த வழி தவம் செய்வதல்ல. யோகப் பயிற்சி செய்வதல்ல. விரதம் இருப்பதல்ல. இல்லவே இல்லை. சிருஷ்டிதான் அதற்கான ஒரே வழி. சிருஷ்டக்கும் போது கடவுளோடு இணைந்த நிலை பெறுகிறாய்.
.
வாழ்க தமிழகம் வளமுடன் இயற்கை வழியில் வாழ்க

Comments
Post a Comment