பிரதோஷ வகைகளும், அதன் பயன்களும்...!
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
நித்திய பிரதோஷம் - தினமும் சு ரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.
திவ்ய பிரதோஷம் - பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.
தீப பிரதோஷம் (மகா பிரதோஷம்) - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.
சப்தரிஷி பிரதோஷம் - பிரதோஷ காலத்தில் பு ஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஏகாட்ச்சர பிரதோஷம் - வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.
அர்த்தநாரி பிரதோஷம் - வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
திரிகரண பிரதோஷம் - வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.
பிரம்ம பிரதோஷம் - இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷம் - வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.
கந்த பிரதோஷம் - சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.
சட்ஜ பிரபா பிரதோஷம் - வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம் - வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.
துத்த பிரதோஷம் - வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.
எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்வதால் என்னனென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் :
ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள், சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்
திங்கள், சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்
உங்களின் பிரதான தோஷங்கள் நீக்கி பிரகாசமான வாழ்வை பெறுங்கள்....!
Comments
Post a Comment