செல்வ வளத்தையும்,செல்வாக்கையும் அள்ளித் தரும் சிவராத்திரி கிரிவலம்!!!

உலகத்தை வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரத நாடுதான் பூஜை அறையாக இருக்கும்;அந்த பூஜை அறையில் சுவாமி படங்கள்,விக்கிரகங்கள் இருக்கும் இடமாக நமது தமிழ்நாடு இருக்கும்;பூமியில் அனைத்துவிதமான கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்தது நமது தமிழ்நாட்டில் தான்;
நாம் எவரும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிடவில்லை;ஈசனின் அம்சமாகிய ஒரு ஆண்;சக்தியின் சிறுவடிவமான ஒரு பெண்;இருவரின் இணைப்பால் தான் நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்திருக்கின்றோம்;மனிதப் பிறவி மிகுந்த போராட்டம் மற்றும் புண்ணியச் சேர்க்கையால் தான் நமக்குக்கிடைத்திருக்கின்றது;
இப்பிறவியில் தமது ஆயுளில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு தினமும் நெற்றியில் யார் விபூதி/குங்குமம்/திருநாமம் அணியவில்லையோ அவர்கள் மறுபிறவியில் மரம்/செடி/கொடியாகத்தான் பிறப்பார்கள் என்பது அகத்தியர் கூறும் தேவரகசியம்!
விண்ணுலகில் நமது முன்னோர்கள் கடுமையாக விரதம் இருந்து வரம் பெற்றால் மட்டும் தான் இங்கே நம்மால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும்;இல்லாவிட்டால் ஒருமுறை கூட அண்ணாமலை என்ற ஊருக்குக் கூட செல்ல முடியாது;சதுர்த்தசி திதி வரும் நாளைத்தான் சிவராத்திரி என்று நாம் கொண்டாடுகின்றோம்;
200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மாதப் பிறப்பு அன்று கிரிவலம் செல்வதுதான் மரபாக இருந்துவந்தது;தற்போது அண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;நம்மில் பலர் அண்ணாமலையை பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றோம்;இது அறியாமையின் வெளிப்பாடு;எல்லா நாட்களிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை கிரிவலம் வந்தது ப்ரபஞ்ச அன்னையான பார்வதி தேவியே! அன்னைக்கு துணையாக சென்றது பார்வதி தேவியின் அருந்தவப் புதல்வனும்,நமது ஆதி முன்னோருமாகிய அகத்தியரும் கிரிவலம் வந்தார்கள்;அப்படி அவர்கள் கிரிவலம் வந்தது ஒரு சிவராத்திரி அன்றுதான்;அதனால் தான் பவுர்ணமி கிரிவலத்தை விடவும் சிவராத்திரி கிரிவலம் மிகவும் சர்வசக்தி வாய்ந்ததாக இருக்கின்றது;
தொடர்ந்து 36 சிவராத்திரி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்தாலே போதும்;நமது அனைத்து கர்மவினைகளும் கரைந்து நலமான,வளமான,சக்தி வாய்ந்த வாழ்க்கை இப்பிறவியிலேயே கிட்டிவிடும்;
தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வரலாம்;நமது முயற்சியை நமது கர்மவினைகள் தடுக்கத் தான் செய்யும்;அதனால்,தொடர்ந்து சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்ல இயலாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரிகிரிவலத்தை நிறைவு செய்து வளமோடு வாழ்க!

அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் சிவராத்திரி கிரிவலம் வரும் போது சில சித்தர்களது தரிசனம் நம் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;அந்த சித்தர்களது வம்சாவழியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்று அர்த்தம்;
அண்ணாமலை கிரிவலத்தின்போது உங்களுக்கு கிட்டும் தெய்வீக அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தாதீர்கள்;அது தவறு;
சிவராத்திரி கிரிவலத்தின் போது,அன்னதானம்,ருத்ராட்ச தானம்,ஆடை தானம்,பழதானம்,கோதானம்,சொர்ண தானம்,பழச்சாறு தானம் செய்வது நன்று;இந்த தானங்கள் அனைத்தும் செய்ய முடியாவிட்டாலும்,இதில் ஏதாவது ஒரு தானத்தைச் செய்துவருவது நன்று;
*ஓம் அருணாச்சலாய நமஹ*

Comments