முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்!!

முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்!!

சருமத்திற்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பு முகப்பரு. பருவமடையும் போது ஆண் பெண் ஆகிய இருவருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் எண்ணெய் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எண்ணெய் இயற்கை வழியில் சருமத்தை பாதுகாக்கிறது. சில நேரங்களில் எண்ணெய் சுரப்பிகளின் அருகில் இருக்கும் செல்கள் அந்த சுரப்பிகளில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் எண்ணெய் ஒரு இடத்தில் தங்க நேரிடுகிறது. அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் ஊடுருவும் போது சுற்றியுள்ள திசுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்புகள் சருமத்தில் கொப்பளங்களாக மாறுகின்றன. இது ஆழமாக இருக்குமானால் அதுதான் முகப்பரு. இதனால் ஏற்படும் வீக்கத்தால் கட்டிகள் வருகின்றன. இந்த கட்டிகள் உடையும் போது அதிலிருந்து வரும் எண்ணெய் தான் வெண் புள்ளிகள் அல்லது ஒயிட்ஹெட் என்பதாகும். இவைகள் உடலின் ரசாயன மாற்றத்தால் கருப்புள்ளிகளாக மாறுகின்றன.
இந்த வெண்புள்ளிகள் தோன்றாமல் தடுக்க வழிகள்:
முகத்தை மென்மையான க்ளென்சர்கள் கொண்டு ஒரு நாளில் 2 முறை நன்றாக கழுவ வேண்டும். அதிக முறை முகம் கழுவதும் இந்த தொந்தரவை அதிகப்படுத்தும்.
கடினமான சோப்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையும்.
முகத்தை சுத்தம் செய்த பின் அழுக்குகளை அகற்ற டோனர் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் துளைகள் அளவு குறைந்திடும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதால் சருமம் மென்மையாகும்.
சரும துளைகளை அடைக்காமல் இருக்கும் ஒப்பனைகளை பயன்படுத்தவும்.
ஒப்பனைகளுக்கு பயன்படுத்தும் பிரஷ் , ஸ்பாஞ் போன்றவற்றை பயன்பாட்டிற்கு பிறகு காய வைத்து மறுபடி பயன்படுத்தவும். இவைகளில் நுண் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம்.
இரவு உறங்க செல்வதற்கு முன் ஒப்பனைகளை கலைத்து விட்டு உறங்கவும். இதனால் சரும துளைகள் அடைபடாமல் இருக்கும்.
தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.
வெண்புள்ளிகளை கிள்ளக்கூடாது. கிள்ளும்போது பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் பித்தப்பை சுத்தமாகும்.
அடிக்கடி தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். தலை எண்ணெய் பிசுக்குடன் இருந்தாலும் முகத்தில் எண்ணெய் வழியும்.


தயிர்:
நீண்ட காலமாக சரும நோய்களுக்கு தயிர் சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. தயிரில் இருக்கும் ப்ரோபையோடிக்கள் மருத்துவ தன்மையை கொண்டுள்ளன.
செய்முறை:
ஒரு ஸ்பூன் தயிரை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். மிருதுவான பேஸ்ட் போன்ற வடிவத்தில் வந்தவுடன் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு ஈர துணியில் அதனை எடுத்துவிட்டு முகத்தை நன்றாக கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

கொத்தமல்லி இலை :
கொத்தமல்லி இலைக்கு மருத்துவ பலன்கள் மிகவும் அதிகம். இந்த இலையில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள் தான் இந்த மருத்துவ தன்மைக்கு காரணமாய் இருப்பவை. கொத்தமல்லி பேஸ்ட் முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த ஒரு தீர்வு.

செய்முறை:
ஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை எடுத்து மையாக அரைக்கவும். இதனை முகம் மற்றும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவவும். காய்ந்தவுடன் முகத்தை நீரில் கழுவவும்.
இதற்கு மாற்றாக, கொத்தமல்லி விதைகளை (தனியா) நீரில் கொதிக்க வைத்து. அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி வெண்புள்ளிகளை அகற்றுவதில் சிறந்தது என்று கருதப்படுகிறது. இது சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்கி வெண்புள்ளிகளை அகற்றுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் வீக்கத்தை குறைக்கின்றன.
செய்முறை:
இரண்டு ஸ்ட்ராபெரிகளை எடுத்து கூழாக்கி அதில் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

வெந்தய இலைகள்:
வெண்புள்ளிகளை முற்றிலும் ஒழிப்பதற்கு வெந்தய இலைகளை பயன்படுத்தலாம். வெந்தய இலையை பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவுவதால் முகத்தின் தன்மை மேம்படுகிறது. முகத்தின் சுருக்கங்கள் அகல்கிறது. சருமம் நீர்ச்சத்தோடு இருக்க உதவுகிறது. வெண்புள்ளிகள் முற்றிலும் மறைகிறது.
செய்முறை:
வெந்தய இலைகளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை ஸ்க்ரப்:
சர்க்கரை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படலாம். ஆனால் சருமத்தில் தடவுவதால் நல்ல பலனை தருகின்றது. இதன் சொரசொரப்பு தன்மை ஸ்க்ரப்பாக பயன் பட உதவுகிறது. சர்க்கரை சிறிதளவு எடுத்து முகத்தில் சூழல் வடிவத்தில் தேய்க்கும் போது டெட் செல்கள் வெளியேறுகின்றன. சருமத்திற்கும் இருக்கும் அழுக்குகளும் பாக்டீரியாக்களும் மறைகின்றன.
செய்முறை:
தேன் மற்றும் சர்க்கரை சிறிதளவு எடுத்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். முகத்தில் கைகளால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும்.10 நிமிடங்கள் கழித்து ஒரு ஈர துணியால் துடைத்து விட்டு முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒருமுறை இந்த முறையை பின்பற்றலாம். உடனடியாக உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தை உணரலாம்
என்ன வாசகர்களே! முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளை பற்றிய விளக்கங்களும் அதன் தீர்வுகளும் தெரிந்து விட்டது. இனி சருமத்தை பொலிவாக்குவது தான் நமது அடுத்த வேலை. பண்டிகை காலம் நெருங்கி விட்டதல்லவா?

Comments