ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உண்ண வேண்டிய உணவுகள் !!

ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உண்ண வேண்டிய உணவுகள் !!

                               Image may contain: fruit and food

காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை அதிகரிக்கும். அதுவும் ஓட்ட பயிற்சி உடலுக்கு சிறந்தது. இந்த பயிற்சியை மேற்கொள்ள சிறந்த ஆற்றலும் தெம்பும் வேண்டும். ஓட்ட பயிற்சியின் மூலம் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதே சமயம் உங்கள் முழு ஆற்றலும் செலவாகி நீங்கள் சோர்வடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஓட்டபயிற்சியை காலையில் மேற்கொள்வது நல்லது தான் . ஆனால் நாம் இந்த பயிற்சிக்கு பிறகு சாப்பிடும் உணவு என்ன என்பது மிகவும் முக்கியம். சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அடைய கூடிய சுவை மிகுந்த உணவு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து இதன்படி உங்கள் உணவு அட்டவணையை மாற்றினால் ஆரோக்கியமான வாழ்வு உங்கள் கையில்.

சிக்கனின் நெஞ்சு பகுதி குறைந்த கலோரி கொண்டது. இது மிகவும் ஆரோக்கியமான உணவு . சரியான கூட்டு பொருட்களால் இதனை இன்னும் சுவையானதாக மாற்ற முடியும்.
ஓட்ட பயிற்சியை தொடங்குவதற்கு முன் இதனை தயார் செய்து விட்டு போனால், வந்தவுடன் இதனை மகிழ்ச்சியோடு உண்ணலாம்.
காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், இந்த சிக்கன் மற்றும் பழுப்பு அரிசியை காலை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காது.

கடல் உணவுகளில் சால்மன் மீன் போன்ற ஒரு சுவை மிகுந்த உணவு வேறெதுவும் இல்லை. உங்கள் உடலை சோர்விலிருந்து மீட்டெடுக்க சால்மோனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ஆன்டிஆக்ஸிடென்ட்களும் உதவுகின்றன.
காய்கறி மற்றும் உருளை கிழங்குடன் இதனை சேர்த்து சமைக்கலாம். சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்ப்பதன் மூலம் இதன் ஆரோக்கிய பலன் அதிகரிக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் ஒரு வகை உணவு இந்த சால்மன்.

ஓட்ட பயிற்சியை மேற்கொள்பவர்கள் அவர்களின் ஆற்றலை அதிகரிக்க கார்போஹைட்ரெட் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போ அதிகம் உள்ள ஒரு உணவு வாழைப்பழம்.
இதனை பழமாக உண்பதை விட பால் சேர்த்து வாழைப்பழ மில்க் ஷேக்காக பருகலாம். கொழுப்பில்லாத பால், வாழைப்பழம் மாறும் ஸ்ட்ராபெரியை ஒன்றாக சேர்த்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் உங்கள் காலை உணவு சிறக்கும்.

பழங்கள் வைட்டமின்களின் ஆதாரமாகும். ஓட்டப்பயிற்சிக்கு பின்னர் பழங்கள் உண்ணுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரஞ்சு, ஆப்பிள் ப்ளாக்பெர்ரி மற்றும் நாரத்தம்பழம் போன்றவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இவை ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

ஒரு நாளை ஆரோக்கியமாக தொடங்க காய் கறிகள் சிறந்த தீர்வாகும். அவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட், புரதம், வைட்டமின், மினெரல் போன்றவை உடலுக்கு வலுவை சேர்க்கிறது. மெலிந்த தசைகளை வலு பெற செய்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கீரைகள், லெட்டூஸ், ப்ரோக்கோலி, கேரட் போன்றவற்றையும் உண்ணலாம். பிரெட்டுடன், காய்கறிகளை சேர்த்து உண்ணுவது நன்மை கொடுக்கும். வேக வைத்த முட்டையும் காலை உணவில் இடம் பிடிக்கலாம்.

பாதாம் ஆன்டிஆக்ஸிடென்டின் ஆதாரமாகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. ஓட்ட பயிற்சி செய்பவர்கள் இதை உண்ணுவது நல்லது. கார்ன் பிளக்ஸ் மற்றும் மில்க் ஷேக்குடன் இதனை சேர்த்து எடுத்து கொள்வது வயிற்றை நிரப்பும்.

ஓட்ஸில் உள்ள புரதம், கார்போஹைடிரேட் போன்றவை உடலுக்கு ஆற்றலை மீட்டு தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி பசியை குறைக்கிறது. ஓட்ஸுடன் சேர்த்து பழ வகைகளையம் உண்ணலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

கிரீக் யோகர்ட் ஓட்ட பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு சுவையான சிற்றுண்டியாகும். 45 நிமிடங்கள் தொடர்ந்து ஓடிய பின் இதனை எடுத்து கொள்வது நல்லது. புரதம் அதிகமாக இருக்கும் இந்த யோகர்டுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் இதன் சுவை அதிகரிக்கும். இது உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
ஓட்ட பயிற்சிக்கு பிறகு உண்ண வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொண்டோம் . இதனை பின்பற்றினால் நல்ல உடல் நலனை பெறலாம்.

Comments