சிந்தனைக்கு..- 2

சிந்தனைக்கு.. 2

1 , எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் பொது ஒன்றை மட்டும் மறக்காதீர்கள்

எதிர்காலம் என்ற ஒன்று உள்ளதை

2 , உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரிடம் கோபம் கொள்ளாதே

3 , உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை

நிராகரித்தவருக்கே

4 , வெற்றி இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை

ஆனால் வெற்றி ஒன்றே வாழ்க்கையும் இல்லை

5 , ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல

விழுந்த போழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை

6 , இந்த உலகத்தில் தன்னை போல பிறரையும் நேசிக்க தெரிந்தவன் இருப்பான் என்றால்

கடவுள் இருக்கிறார்

7 , குற்றம் சொல்ல ஆயிரம் காரனங்கள் இருக்கலாம்

ஆனால்

மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்

அன்பு

அன்பு மட்டும் தான்

8 , இருப்பதை கொண்டு இல்லாவருக்கு கொடுப்போமாயின்

இன்று மட்டுமல்ல என்றும் இல்லாமை என்பதே இருக்காது

9 , காரணம் இன்றி கஷ்டங்கள் வருவதில்லை

கஷ்டங்களை கடந்து செல்பவனே வாழ்வின் மகத்துவத்தை பெறுகிறான்

10 , தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும்

தவறுகளை திருத்திக்கொள்ளும் பலமும் தான்

உண்மையான வெற்றிக்கு வழி

11 , வாழ்க்கையில் போராட்டம் இல்லை என்றால்

எந்த முன்னேற்றமும் இல்லை

நல்லதே நடக்கும்

Comments