ஜாதகத்தில் மூன்றாம் பாவ விசேசம்

ஜாதகத்தில் மூன்றாம் பாவ விசேசம்

லக்னத்திற்கு 3ல் சூரியன் இருந்தால் ஜாதகர் எல்லோரையும் அரவனைத்து செல்லும் சுபாவம் உடையவர். இவர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார்.
லக்னத்திற்கு 3ல் சந்திரன் இருந்தால் ஜாதகர் அன்னதானப்பிரபு,கையில் அமிர்தம் வைத்திருப்பவர்.இவர் கையால் மருந்து சாப்பிட நோய் விரைவில் குனமாகும்.
லக்னத்திற்கு 3ல் செவ்வய் இருந்தால் ஜாதகருக்கு பதவி கிடைத்தால் எல்லோரையும் ஆட்டிப்படைப்பார்.கையில் ஏதாவது ஒரு ஆயுதத்தை வைத்துக்கொள்ள பிரியப்படுவார்.
லக்னத்திற்கு 3ல் புதன் இருந்தால் ஜாதகர் நல்ல எழுத்தாளர்.கையில் புத்தகம் வைத்திருப்பவர்.சரஸ்வதியின் அருள் பெற்றவர்.
லக்னத்திற்கு 3ல் குரு இருந்தால் ஜாதகர் கையில் தெய்வம் குடியிருக்கும்.இவர் கையால் ஆசீர்வதித்தால் எல்லா தோசங்களும் நீங்கும்.
லக்னத்திற்கு 3ல் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் கையில் லக்ஷ்மி அமர்ந்திருப்பாள்.இவர் கையால் பணம் பொருள் பெற்றால் செல்வம் பெருகும்.
லக்னத்திற்கு 3ல் சனி இருந்தால் ஜாதகர் கை வைத்த காரியம் எல்லாம் தாமதமாக நடைபெரும்.ஜாதகர் கஞ்சனாக இருப்பார்.
லக்னத்திற்கு 3ல் ராஹு இருந்தால் ஜாதகர் கை வைத்த பொருள் உடைந்து போகும்.ஜாதகர் கையால் எது வாங்கினாலும் அந்தப்பொருள் களவு போகும்,அல்லது தொலைந்து போகும்.
லக்னத்திற்கு 3ல் கேது இருந்தால் ஜாதகர் தொட்டது எதுவும் துலங்காது.கை வைத்த காரியம் தடைபடும்.

Comments