நான்... நான்... நான்...

நான்... நான்... நான்...

நான் தான் சம்பாதித்தேன்,
நான் தான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி  செய்தேன்,
நான் உதவி செய்யலனா? என்ன ஆவது?

நான் பெரியவன்,
நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!...

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் என் கிட்னியை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் காயை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ? இயக்குகிறானோ? அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.
சிவம் அன்பு அன்பு சிவம் 
அவன் தான் இறைவன்.

அவன் தான் ஆதி.
அவன் தான் அனாதி
அவன் தான் பிறப்பு இறப்பு அற்றவன்.
அவன் தான் எல்லாம்.
அவன் தான் சிவம்

ஆம்.......
அவன் தான் "உன்னுள் இருந்து உன்னை இயக்கி, உன்னை நான் என்று சொல்லவும் வைக்கிறான்."

அவன் உனக்கு நோயைக் கொடுத்து, பின் குணமாக்கி, ஆரோக்கியத்தின் சிறப்பையும் அவசியத்தையும் உணர வைக்கிறான்.

அவன் அன்பும், கருணையும் நிறைந்தவன்.

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பும் கருணையுமாய் நடந்து கொள்ளுங்கள்.

அன்பும் கருணையுமே அனைத்து விதமான துன்பப் பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பையும் கருணையையும் பரிமாறிக் கொள்வோம்.

                          அன்பு
                  நான் அல்ல நாம்
   நாம் இறைவனை உணர்ந்தவர்கள்
                         சிவம்
இதை ஏற்றுக் கொண்ட நீங்களும் இறைவனே!

Comments