இந்துப்பு

இரத்தத்தில்_உள்ள தாதுக்களின் குறைபாட்டைசரிசெய்யும் மருத்துவகுணம் கொண்ட_இந்துப்பு
இந்துப்பு கடினமற்ற உடையும் தன்மைமிக்க வையாகக் காணப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைக்கும், பாறை உப்பு எனும் இந்துப்பாகும். இந்துப்பு நல்ல நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்ட பிறகே, நமக்கு பயன்படுத்தக் கிடைக்கிறது.

சற்றே_மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு_நிறத்தில்காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. மனிதருக்கு நலம் தரும் 80 வகையான கனிமத்தாதுக்களை கொண்டுள்ளது.

இந்துப்பின் பயன்பாடு குறித்து பழமைவாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட வியாதிகள் போக்கும் மருந்துகள் தயாரிப்பில், மனிதருக்கு நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது.
இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மைமிக்கது.கண்களைக்காக்கும் ஆற்றல் உண்டு. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். குளிக்குமுன் இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
மேலும், தினமும் இந்துப்பைக் கொண்டு சமைத்த உணவை, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவர, வியாதிகள் அணுகாத நல்வாழ்வை நலமுடன் வாழலாம்.
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.
மூலவியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.

Comments