பாம்புக்கடி தெரிய வேண்டியவை

பாம்புக்கடி தெரிய வேண்டியவை

10 விஷயங்கள்.
பாம்பின் விஷக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விஷமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விஷமாகும்.
1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.
2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.
3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.
4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.
5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.
6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.
7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.
8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவி
லிருந்தாலும் பேசமுடியாது.
9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.
10. சிகிச்சை முதலுதவி -
கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம்.
அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.

மருந்துகள்:
விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது.
இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.
விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.

நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விஷத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.
2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.
உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

Comments