பத்தியம் விதிமுறை என்பது என்ன ?

பத்தியம்  விதிமுறை என்பது என்ன ?

                        பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு  - உருளைக்கிழங்கு , வாழைக்காய் , மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும் .

                        குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான , உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும் .

                       சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி -  சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .

                       சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் .

                       மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும்  முறையே நீக்க வேண்டும் .

                      பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை -   அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும் .

                      பத்தியம் வைப்பதும் - நீக்குவதும்  பண்டிதற்கு அழகு

கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

                     கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு , புளி நீக்கி உண்ணல் வேண்டும் . மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும் , சுட்ட புளியும் கூட்டி நெய் , சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் . . மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும் . இதில் முறை தவறினால் கை , கால் முதலியன வீங்கும் .

பத்தியத்திற்கு ஏற்ற  உணவுப்பொருட்களாவன :-

                      கட்டிய உப்பு , ஆமை , புளியாரை , சீயக்கொளுந்து , நெல்லி , அரு நெல்லி , வெள்ளாடு , முயல் , ஊர்க்குருவி , காடை , மான் , மரை , சுறாமீன் , மயரை , குரவை , வரால் , தேளி , மிளகு , சர்க்கரை , தேன் , சிறுகீரை , ஆவின் பால் , நெய் , சிறுபயறு , பொன்னாங்கண்ணி , துவரை , அவரை பிஞ்சு , புடலம் பிஞ்சு , கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு ,  முருங்கை பிஞ்சு , பரட்டை கீரை , முள்ளி பிஞ்சு , தூதுளை சமூலம் , கண்டங்கத்திரி பிஞ்சு , ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது ......

Comments