கிரிவலம்: மாதத்துக்கு ஏற்ப விரத பலன்கள்

கிரிவலம்: மாதத்துக்கு ஏற்ப விரத பலன்கள்


ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் யாவும் தூள் தூளாகிச் சொல்லாமல் விலகும்.

  • சித்திரை மாதம் கிரிவலம் வந்தால் தான, தர்மம் செய்த பலன் கிடைக்கும்.
  • வைகாசி மாதம் கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள் தொலையும்.
  • ஆனி மாதம் கிரிவலம் வந்தால் உடல் ஆரோக்கியம் பலப்பட்டு நீண்ட ஆயுள் அடையலாம்.
  • ஆடி மாதம் கிரிவலம் வந்தால், உடற்பிணிகள், உள்ளப் பிணிகள் எல்லாம் விலகும்.
  • ஆவணி மாதம் கிரிவலம் வந்தால் சுபிட்சம் பொங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
  • புரட்டாசி மாதம் கிரிவலம் வந்தால் சத்ரு நாசமடைவர். கேட்பது கிடைக்கும்.
  • ஐப்பசி மாதம் கிரிவலம் வந்தால் பட்டம், பதவி, புகழ், கீர்த்தி வந்தடையும்.
  • கார்த்திகை மாதம் கிரிவலம் வந்தால் அளவிட முடியாத சுக போகங்கள் கிட்டும். தலைமை தானாக வந்தடையும்.
  • மார்கழி மாதம் கிரிவலம் வந்தால் பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு கிட்டும்.
  • தை மாதம் கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள், தீவினைகள் நீங்கி நற்பயன்கள் தொடங்கும்.
  • மாசி மாதம் கிரிவலம் வந்தால் செல்வம் பெற்று கீர்த்தியுடன் வாழ்வர்.
  • பங்குனி மாதம் கிரிவலம் வந்தால் ஞானம் பெற்று மகானாய்த் திகழ்வர்.

சிவராத்திரி அன்று, தீபாவளி அன்று, கார்த்திகைத் தீபநாள் அன்று, வருடப்பிறப்பு அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருபவர்கள் கோடிப் பங்கு அதிகப் பலனைப் பெறுவர்.

பவுர்ணமி அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் யாவும் தூள் தூளாகிச் சொல்லாமல் விலகும். ஒளி மிகுந்த எதிர்காலம் கண்களுக்குப் புலப்படும்.

தினந்தோறும் அண்ணாமலையைக் கிரிவலம் வருவோருக்கு கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாது. அவர்களுக்கு இந்திர யோகம் கிடைக்கும்.

அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தப் பெருமக்கள் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கிரிவலம் வந்தால் அவர்களது கஷ்டங்கள் கணப்பொழுதில் விலகும்.

Comments