விந்தணு, அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

விந்தணு, அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆல மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைப்பார்த்தாளாம் என்பது பொன்மொழி.முற்காலத்தில் எந்தவித சோதனைகளும் இல்லாமல் கர்ப்ப குறைபாடுகள் உள்ள கணவன் மனைவி இருவருமே ஆல்,அரசமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் வினாயகரைச் சுற்றிவரவேண்டுமென்று பெரியோர்கள் சொன்னார்கள். கர்ப்பக் கோளாறுகளுக்கு ஆல்,அரசின் காற்றை சுவசித்தால் நல்லது. கிளம்புங்கள் இன்றே.

மருத்துவம்
நாட்டு மருந்துக்கடைகளில் ஆலம் விதை ,அரசம் விதை வகைக்கு நூறு கிராம் வாங்கிக் கொள்ளவும். அவை சுத்தமின்றி பொடி கற்களுடன் கூடிய குப்பைகளுடன்,கச கசாவைவிட நைஸ்ஸாக இருக்கும்.பொருமையுடன் சுத்தம் செய்து விட்டு நன்கு அலசி மிதக்கும் அசடுகளையும் நீக்கிவிட்டு வெய்யிலில் ஓரிரு தினங்கள் வெய்யிலில் நன்கு காயவைத்து வாயில் வேட்டி துணியில் ஜலித்து பத்திரப்படுத்தவும். தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் வாயில் இட்டு கொப்பளித்து விழுங்கவும்.உடனே ஊரவைத்து தோல் உரித்த பாதாம் பருப்பு 3,அத்திப்பழம் 2 அல்லது 3 சிலைஸ் மென்று கூழாக்கி விழுங்கிவிட்டு சுத்தமான பசும்பால் குடிக்கவும் தினசரி முருங்கைக்கீரையை ஏதாவது ஒரு வழியில் உண்ணவும் .45 தினங்களில் புத்திர சந்தானத்திற்கான அறிகுறிகள் தெரிய வரும்.
கணவன் மனைவி இருவருமே கடைபிடிக்கவும்.
வாழையடி வாழையென சந்ததி சிறக்க வாழ்த்துக்கள்.

Comments