கவலைகளை விரட்டுவாள் காளிகாம்பாள்!

கவலைகளை விரட்டுவாள் காளிகாம்பாள்!

சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கிறது காளிகாம்பாள் திருக்கோயில். குறுகலான சிறிய தெருவுக்குள்தான் இருக்கிறது கோயில். ஆனால் நம்மை விசாலப்படுத்தி, உயர்த்திவிடுவதில் கருணைக்காரி காளிகாம்பாள்!

'கமடம்’னா ஆமை. இங்கே, காளிகாம்பாள் கோயிலி ன் ஸ்வாமி பேர் ஸ்ரீகமடேஸ்வரர். இவர் சந்நிதிக்கு வந்து, மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டாப் போதும்... நம்மளோட கர்வம், அலட்டல் மாதிரியான கெட்டதுகளையெல்லாம் போக்கி, அருள்பாலிப்பார் ஸ்ரீகமடேஸ்வரர்!''  காமம், குரோதம், கர்வம் என்கிற கசடுகளையல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஸ்ரீ கமடேஸ்வரர் முன்னே நின்று, மனதாரப் பிரார்த்த னை செய்யுங்கள். நம் வாழ்க்கையையே மலரச் செய்வார். வளரச் செய்வார். வாழச் செய்வார்!

காளிகாம்பாள் என்றால் காளி. காளி என்றால் உக்கிரத்துடன் இருப்பவள். ஆனால் இங்கே காளி சாந்தசொரூபினி. அமைதியே உருவான திருமுக த்துடன், மந்தகாசப் புன்னகை தவழ, நம்மை யெல்லாம் ஒரு குழந்தையைப் போல் ஏற்றுக் கொண்டு, நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறாள் அன்னை.

காளிகாம்பாளை வணங்குவோம். அவளின் அருளையும் கருணையையும் பெற்று, இனிதே வாழ்வோம்! செவ்வரளி மாலை சார்த்துங்கள். எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டுங்கள். இன்னும் வளமாக்குவாள் வாழ்க்கையை. லேசாக்குவாள் உங்கள் மனதை!

முக்கியமாக, கமடேஸ்வரரை மனதாரப் பிரார்த்திப்போம். நம் கர்வம் அழித்து, நம்முடைய தடைகளையெல்லாம் தகர்த்து அருள்வார் கமடேஸ்வரர்.

Comments