பீட்ரூட் ஜாம் - இரத்த சோகையை போக்கும்

பீட்ரூட் ஜாம்

இரத்த சோகையை போக்கும்

 தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - கால் கிலோ

கொட்டை  நீக்கிய
பேரீச்சம்பழம் - கால் கிலோ

 தேன் - 250 கிராம்

செய்முறை :

பேரீச்சம் பழத்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பீட்ரூட் தோலை நீக்கி பூப்போல துருவி தேவைக்கேற்ப கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேரீச்சம் பழம், பீட்ரூட் இவைகளை ஒன்றாக போட்டு மிக்சியில் இட்டு அரைத்து அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து தேன் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த இனிப்பு காணாது என்றால் தேவைக்கேற்ப சிறிது கருப்பட்டி ( அ ) நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.

பயன்கள் :

இரத்த சோகையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. நரம்புத் தளர்ச்சியை போக்கி நல்ல சுறுசுறுப்பை தருகிறது. பீட்ரூட் இரத்த சோகையைப் போக்கும் நார் சத்து மிகுந்தது.

Comments